என்எல்சி விவகாரம்.. 2வது நாளாக தொடர்ந்த பதற்றம்.! இரவு நேர பேருந்து சேவை நிறுத்தம்.!

பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதால் நேற்றும் கடலூரில் இரவு நேர பேருந்து நிறுத்தப்பட்டது. 

என்எல்சி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்க பணிக்காக கடலூர் மாவட்டம் மேல்வளையமாதேவி பகுதியில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் பணியானது நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு விவசாயிகள் , அரசியல் கட்சி தலைவர்கள் என பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. மேலும் இந்த போராட்டத்தின் போது கடலூர் சுற்றுவட்டார் பகுதிகளில் சுமார் 15 அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன.

இதனால் ஏற்பட்ட பதட்டத்தை தணிக்க கடலூர் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கடலூரில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் ஒரு சில இரவு நேர உள்ளூர் பேருந்து சேவையும் நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டு இருந்தது. நேற்றும் இதேபோல் சில இடங்களில் பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றதால் நேற்று இரவும் பல்வேறு ஊர்களுக்கு செல்லும் இரவு நேர உள்ளூர் பேருந்து சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் சொந்த ஊர் செல்லும் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.