டிவிட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓ நியமனம்.! எலான் மஸ்க் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

டிவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோ நியமிக்கப்பட்டுள்ளார்.

உலக பணக்காரர்களில் ஒருவான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து யாரும் எதிர்பார்த்திராத ப்ளூ டிக் கட்டணம், ஆள் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அந்த வகையில், தற்போது அடுத்த புதிய மாற்றமாக டிவிட்டர் நிறுவனத்திற்கு புதிய பெண் தலைமை அதிகாரி (CEO) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அறிவித்திருந்தார்.

புதிய தலைமை நிர்வாக அதிகாரி ஏறக்குறைய ஆறு வாரங்களில் பணியைத் தொடங்குவார் எனவும், டிவிட்டர் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கும் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்பார் என்றும் அறிவித்திருந்த நிலையில், ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக அமெரிக்காவைச் சேர்ந்த லிண்டா யாக்காரினோ நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர், ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோவை வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர் முதன்மையாக வணிக நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும், அதே நேரத்தில் நான் தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் புதிய தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துவேன். இந்த பிளாட்ஃபார்மை X ஆக மாற்ற லிண்டாவுடன் இணைந்து செயல்பட எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.