கேட்காமல் போட்டோ எடுத்த மர்ம நபர்! எம்.ஜி.ஆர் கொடுத்த தண்டனை?

M.G.Ramachandran : அனுமதி கேட்காமல் தன்னை புகைப்படம் எடுத்தாததால் எம்.ஜி.ஆர் அந்த சமயம் கடுமையாக கோபம் அடைந்துள்ளார்.

சினிமாவில் இருக்கும் பிரபலங்களை நேரில் பார்க்கும்போது புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று மக்கள் விருப்பப்படுவது உண்டு. ஒரு சில நடிகர்களுக்கு இது பிடித்து இருந்தாலும் சில நேரங்களில் கோபம் அடைந்துவிடுவார்கள். அந்த வகையில், எம்.ஜி.ஆர் கூட திரைப்படங்களில் நடித்து கொண்டு பீக்கில் இருந்த காலத்தில் அனுமதி கேட்காமல் ஒருவர் புகைப்படம் எடுத்ததால் கோபப்பட்டு இருக்கிறார்.

ஒரு முறை  எம்.ஜி.ஆர் தியானம் செய்வதற்காக தியானம் மண்டபம் ஒன்றிற்கு சென்று இருந்தாராம். சட்டைபோடாமல் தியானம் செய்து கொண்டு இருந்த நேரத்தில்  அப்போது திடீரென ஒருவர் புகைப்படம் எடுத்துவிட்டாராம். இந்த தகவல் அங்கு இருந்த காவலர் ஒருவருக்கு தெரிந்ததும் உடனடியாக விரைந்து வந்து எம்ஜிஆரிடம் அண்ணா ஒருவர் போட்டோ எடுத்துவிட்டார் அது யாரு என்று பாருங்கள் என்று கூறினாராம்.

உடனடியாக எம்.ஜி.ஆரின் ஆடை வடிவமைப்பாளர் முத்து இங்கு இருந்தவர்கள் யாரும் வெளியே போக கூடாது கதவை இழுத்து அடையுங்கள் என்று கூறிவிட்டாராம். வாசலில் நின்ற காவலர் யார் எம்.ஜிஆரை புகைப்படம் எடுத்து என்று அங்கு வந்தவர்கள் அனைவரையும் முழுவதுமாக சோதனை செய்துகொண்டு இருந்தார்கள். முதலில் எவ்வளவு தேடியும் அந்த நபரை கண்டுபிடிக்கவே முடியவில்லையாம்.

பின் எம்.ஜி.ஆர் என்னாச்சு அவரை கண்டுபிடிக்க முடியவில்லையா? என கேட்டாராம். இன்னும் கொஞ்ச நேரத்தில் கண்டுபிடித்துவிடலாம் என்று அங்கு இருந்தவர்கள் கூறினார்களாம். பிறகு எப்படியோ புகைப்படம் அடுத்தவரை கண்டுபிடித்து அவரிடம் இருந்த அந்த போட்டோ ரோலை பிடிங்கிவிட்டார்களாம். பிடிங்கிவிட்டு முத்து எம்.ஜி.ஆரிடம் காமித்தாராம்.

எம்.ஜி.ஆர் இதற்கு எவ்வளவு கொடுத்தீர்கள் என்று கேட்டாராம். அதற்கு முத்து 500 ரூபாய் கொடுத்தேன் என்று கூறினாராம். சூப்பர் அப்படி தான் இருக்கவேண்டும் என்று எம்.ஜி.ஆர்  கூறினாராம். ஏனென்றால், அந்த போட்டோ ரோலின் விலையே அந்த சமயம் 100 தானாம் அது அனைத்தையும் பிடிங்கிவிட்டோம் என்பதால் முத்து 500 ரூபாய் பணம் கொடுத்தாராம்.

இருந்தாலும் தியானம் செய்து கொண்டு இருந்த நேரத்தில் சட்டை கூட போடாமல் இருக்கும் போது தன்னை புகைப்படம் எடுத்துவிட்டார் என்ற கோபம் எம்.ஜி.ஆருக்கு அந்த நபர் மீது இருந்ததாம். அந்த புகைப்பட ரோலை திரும்பி கொடுக்காமல் இது தான் அவனுக்கு தண்டனை என்று கூறிவிட்டு எம்.ஜி.ஆர்  சென்றுவிட்டாராம். இந்த தகவலை ஆடை வடிவமைப்பாளர் முத்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.