2 வருடங்களுக்கு பிறகு கடலில் உயிருடன் மிதந்து வந்த காணாமல் போன பெண்மணி!

2 வருடங்களுக்கு பிறகு கடலில் உயிருடன் மிதந்து வந்த காணாமல் போன பெண்மணியை காப்பாற்றிய மீனவர்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பதாக கொலம்பியாவை சேர்ந்த ஏஞ்சலிகா கெய்டன் எனும் பெண்மணி காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கடலில் ஏதோ கட்டை போன்ற ஒன்று மிதந்து வருவதை பார்த்துள்ளனர். அருகில் வரும் வரைக்கும் அது ஏதோ கட்டை போல என்று தான் நினைத்துள்ளனர். ஆனால் உதவிக்காக அவள் லேசாக கை அசைத்த பின்புதான் உயிருடன் இருக்கிறார்கள், மிதப்பது மனிதர் என்பது தெரியவந்துள்ளது. வேகமாக அவ்விடத்தை நோக்கி சென்றுள்ளனர் மீனவர்கள். அப்பொழுது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக காணாமல்போன ஏஞ்சலிகா தான் என தெரிந்து மிகவும்வியந்துள்ளனர்.

இந்நிலையில் வேகமாக அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர் அப்பொழுதுதான் தெரியவந்துள்ளது தாழ்வெப்பநிலை காரணமாக அந்தப் பெண் சோர்வடைந்து பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தண்ணி கொடுக்க முயலும் பொழுது அந்தப் பெண் ‘நான் மீண்டும் பிறந்து வந்துள்ளேன், கடவுள் என்னை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை’ என சந்தோஷத்துடன் கூறியுள்ளார். அதன் பின்பு அவள் நடக்க உதவிய மீனவர்கள் ஏஞ்சலிகாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இரண்டு வருடங்களுக்குப் பிறகு காணாமல் போன ஏஞ்சலிகா உயிருடன் வந்துள்ளது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல் அந்நாட்டிற்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

author avatar
Rebekal