இதற்கு மேகதாது அணை திட்டமே நிரந்தர தீர்வு – கர்நாடகா முதலமைச்சர்

தமிழ்நாடு – கர்நாடகா இடையே கடந்த சில மாதங்களாக காவிரி பிரச்சனை தீவிரமாக இருந்து வருகிறது. காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய போதிய நீரை கர்நாடக அரசு தர மறுக்கிறது என்றும் கூடுதல் நீரை திறந்துவிட கோரியும் சட்ட போராட்டங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக்குழு தமிழகத்துக்கு நீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டும், உரிய நீரை காவிரியில் இருந்து திறக்கவில்லை.

போதிய நீர் இல்லாததால் காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக அரசு திட்டவட்டமாக கூறி வருகிறது. இதுதொடர்பாக இரு மாநிங்களில் பல்வேறு போராட்டங்கள் , இதுதொடர்பான வழக்குக்குகள் முன்னெடுக்கப்பட்டது. காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றால் மேகதாது திட்டம் வந்ததால் மட்டுமே முடியும் எனவும் கூறி வருகின்றனர். ஆனால், மேகதாது திட்டத்திற்கு தமிழக அரசுக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

ராஜமுந்திரி மத்திய சிறையில் இருந்து ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு விடுதலை.!

அத்திட்டம் வந்தால், தமிழகத்துக்கு கிடைக்கும் நீர் சுத்தமாக கிடைக்காது என கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த அக். 13ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை கூட்டத்தில், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 3,000 கனஅடி நீர் தண்ணீரை அக்.16 முதல் அக்டோபர் 31 வரை திறக்க வேண்டும் என  கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்த அளவை திறந்து விடவில்லை.  காவிரி ஒழுங்காற்று குழுவின் 89வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

அப்போது, நவம்பர் 1ம் தேதி முதல் 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு வினாடிக்கு 2,600 கன அடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை செய்தது. அதுமட்டுமில்லாமல், மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. மத்திய அரசின் ஒப்புதல் பெற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மேகதாது திட்டமே நிரந்தர தீர்வு என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில், காவிரி படுகையின் அவல நிலையை போக்க நிரந்தர தீர்வு மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்துவது தான் என்றுள்ளார்.

இதனிடையே, மேகதாதுவில் அணை கட்டும் திட்ட அறிக்கை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. ஒப்புதல் அளிக்கும்படி, மாநில அரசு சார்பில், மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இருப்பினும், இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. மேகதாது விஷயத்தில் கர்நாடகா மீது  மத்திய அரசு விரோத போக்கை காட்டுகிறது என்று முதல்வர் சித்தராமையா கூறியிருந்தார்.

இதற்கு மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கூறுகையில், மேகதாது அணை கட்டுவதற்கு அண்டை மாநிலங்களிடையே ஒருமித்த கருத்து இல்லாததால், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் விவாதம் நடத்த முடியவில்லை. இது மத்திய அரசின் தவறு அல்ல  தெரிவித்திருந்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்