எதிரிகள் சுற்றி வளைத்ததால் தற்கொலை செய்து கொண்ட போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பு தலைவன்!

  • போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பின் தலைவன் அபுபக்கர் ஷேக்கை இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பின் பயங்கரவாதிகள் சுற்றி வளைத்துள்ளனர்.
  • எதிரிகள் சுற்றி வளைத்ததால் தன்னிடமிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்ட போகோ ஹராம் பயங்கரவாதத்தின் அமைப்பின் தலைவன்

வடக்கு மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நைஜீரியாவினை சுற்றியுள்ள உள்ள லிபியா, சூடான், சாத் கமரூன் ஆகிய நாடுகளில் போகோ ஹராம், ஐ.எஸ், அல்கொய்தா போன்ற சில பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ஆப்பிரிக்காவின் மிகவும் கொடிய பயங்கரவாத அமைப்பாக போகோ ஹராம் அமைப்புதான் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த அமைப்பின் தலைவராக அபுபக்கர் ஷேக் என்பவன் செயல்பட்டு வந்தான். இந்நிலையில் நைஜீரியாவில்செயல்பட்டு வரக்கூடிய போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பிற்கு மேற்கு ஆப்பிரிக்க மாகாண இஸ்லாமிக் ஸ்டேட் குழுவிற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினருக்கும் மேற்கு ஆப்பிரிக்க  இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பினருக்கும் இடையே கடந்த மே 18ஆம் தேதி மோதல்  அதிகரித்துள்ளது இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக பயங்கரவாத அமைப்பின் தலைவன் அபுபக்கர் ஷேக்கை அவரது எதிரிகளான இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பின் பயங்கரவாதிகள் சுற்றி வளைத்துள்ளனர்.

தன்னை எதிரிகள் சுற்றிவளைத்து விட்டனர் என்பதால் தன்னிடமிருந்த வெடிகுண்டை போகோ ஹராம் அமைப்பின் தலைவன் அபுபக்கர் வெடிக்க செய்து தன்னை தானே தற்கொலை செய்து கொண்டுள்ளான். தற்போது இந்த தகவல் இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு முசப் என்பவர் தெரிவித்துள்ளார். மேலும் போகோ ஹராம் அமைப்பின் தலைவன் அபுபக்கர் தற்கொலை செய்து உயிர் இழந்ததை நைஜீரிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

author avatar
Rebekal