திணறிய கொல்கத்தா அணி !133 ரன்களில் சுருண்டது

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் 56-வது ஐபில் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றனர்.

இந்த போட்டியானது, மும்பையில் உள்ள வாங்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி  20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 133 ரன்கள் எடுத்தது.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அதிகபட்சமாக  லின் 41,உத்தப்பா 40 ரன்கள் அடித்தனர்.மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சில் மலிங்கா 3 விக்கெட்  கைப்பற்றினார்.

134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற  இலக்குடன் களமிறங்க உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

Leave a Comment