சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும்.! கேரள அரசு அதிரடி உத்தரவு.!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற உத்தரவை கேரள அரசு அமல்படுத்தியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்காதது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதி அமர்வு கடந்த 2018ஆம் ஆண்டு அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோவில் தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என தீர்ப்பு வழங்கினர்.

 இதற்கு ஐயப்பன் பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்தாலும், இரண்டு வருட கொரோனா கட்டுப்பாடுகள் என்பதாலும், உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள அரசு அப்போது அமல்படுத்தாமல் இருந்தது.

இந்நிலையில்,தற்போது, சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்கிற உச்சநீதிமன்ற உத்தரவை கேரள அரசு அமல்படுத்தியுள்ளது.  இதற்காக, கேரள போலீசாருக்கு அம்மாநில அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment