தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் மோசமானது…தேர்வுக்குழுத் தலைவர் நாடவ் லேபிட் சர்ச்சைப் பேச்சு!

இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் அனுபம் கெர் , பல்லவி ஜோஷி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”. காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீர் இந்துக்கள் வெளியேறியதை சித்தரிக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இந்திய பனோரமா பிரிவிற்கு இந்த “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” திரைப்படம்  தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த நவம்பர் – 22 ஆம் தேதி அன்று திரையிடப்பட்டது. இதனையடுத்து, சர்வதேச திரைப்பட விழா கோவாவில் கடந்த நவம்பர் 20-ம் தேதி தொடங்கிய 53-வது (நவம்பர் 28) திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது.

இதையும் படியுங்களேன்- நடிகை மீனாவுக்கு 2-வது திருமணம்..? தீயாய் பரவும் புதிய தகவல்.!

இதில், சர்வதேச போட்டிக்கான தேர்வுக் குழுவிற்கு இஸ்ரேலிய எழுத்தாளரும், இயக்குநருமான நடாவ் லாபிட் தலைமை ஏற்றார். அப்போது, ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ போட்டிப் பிரிவில் அனுமதித்ததற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.நிறைவு விழாவில் பேசிய நடவ் லாபிட் ” நாங்கள் அனைவரும் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” திரைப்படத்தால் அதிர்ச்சியும் கலக்கமும் அடைந்தோம்.

வெறுப்புணர்வைத் தூண்டும் மோசமான பிரசார படமான இந்த படத்தை, சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது எனக்கு குழப்பத்தையும்,அதிர்ச்சியும், கொடுத்துள்ளது. எங்களுக்குத் இது மோசமான திரைப்படமாக தோன்றியது. இந்த விழா உண்மையாக விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் என்பதால், என்னுடைய மனக்கசப்புகளை வெளிப்படையாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்”  என்று கூறியுள்ளார். இவர் பேசியுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment