தீபக் சாஹர் வீழ்த்திய விக்கெட்டால் தொடரை வென்ற இந்திய அணி..!

இன்று இந்தியா , பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் மூன்றாவது மற்றும் கடைசி டி 20 போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது.
Image
அதன்படி முதலில் இந்திய அணி களமிறங்கியது.அணியின் தொடக்க வீரரும் , கேப்டனுமான ரோஹித் ஆட்டம் தொடக்கத்திலே 2 ரன் எடுத்து வெளியேறினர்.பின்னர் தவானும் 19 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார்.
இதை தொடர்ந்து களமிறங்கிய கே.எல் ராகுல் , ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் கைகோர்த்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் விளாசினார். இறுதியாக இந்திய அணி 5 விக்கெட்டை இழந்து 20 ஓவர் முடிவில் 174 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக கே.எல் ராகுல் 52  , ஸ்ரேயாஸ் ஐயர் 62 ரன்கள் அடித்தனர்.
Image
பங்களாதேஷ் அணியில் ஷபியுல் இஸ்லாம் , சவுமியா சர்க்கார் இருவரும் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர். 175 ரன்கள் இலக்குடன் பங்களாதேஷ் அணி களமிறங்கியது.
இதில் வங்கதேச அணியில் முஹம்மது நைம் மட்டும் தனியாளாக போராடினார். அவர் 48 பந்துகளில் 81 ரன்கள் விளாசினார். அடுத்ததாக முகமது மிதுன் 27 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆக இறுதியாக 19.2 ஓவரில் பங்களாதேஷ் அணி 144 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இந்திய அணி சார்பில் தீபக் சாஹர் 6  ,சிவம் துபே 3 விக்கெட்டையும்  வீழ்த்தினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.