மழையால் வீடு இடிந்து 4 பேர் உயிர் தப்பினர்..!

ஆவுடையாரில் மழையால் வீடு இடிந்து 4 பேர் உயிர் தப்பினர்

By bala | Published: Jul 10, 2020 01:29 PM

ஆவுடையாரில் மழையால் வீடு இடிந்து 4 பேர் உயிர் தப்பினர்

ஆவுடையார் கோவில் அருகே பூங்கொடி கிராமத்தில் இன்று அதிகாலையில் கனமழை பெய்தது, இதனால் தண்ணீர் தேங்கி வீடுகள் இடிந்து விழுந்தது, இதில் பூங்குடி கிராமத்தில் டீக்கடை எதிரில் மீமிசல் சாலை அருகே வசித்து வந்த மாரிமுத்து மற்றும் சக்தி தம்பதியினர் வீட்டில் இருக்கும் பொழுது கனமழை காரணத்தால் வீடு இடிந்து தரைமட்டம் ஆனது. மேலும் இதில் மரகட்டில் டீவி, மிக்சி சுமார் 1 லட்சம் மதிப்புள்ள உட்பட அனைத்து பொருள்களும் சேதமடைந்தது.

இந்த நிலையில் அந்த பகுதியில் மழை மற்றும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் வீட்டில் உள்ள நான்கு பேரும் வீட்டின் முன்பு உள்ள அறையில் தூங்கிகொண்டுள்ளனர் அப்பொழுது வீடு இடிந்ததும் அதிர்ஷ்டவசமாக வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மாரிமுத்து, சக்தி இரு குழந்தைகள் மற்றும் ஆகிய நான்கு பெரும் உயிர்தப்பினர்,

Step2: Place in ads Display sections

unicc