34 C
Chennai
Saturday, April 17, 2021

30 கிலோ தங்கம் கடத்தல் ! எந்த விசாரணைக்கும் தயார் – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

தங்க கடத்தல் விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் தயார் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. எனவே தூதரக முகவரியை வைத்து தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்த நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள  பார்சல்களை ஆய்வு செய்த போது சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கம் இருந்துள்ளது.

இந்த கடத்தல் வழக்கில் கேரள தகவல் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ்க்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி, தூதரகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய சரித் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தலைமறைவான ஸ்வப்னா, கேரள அரசின் முதன்மை செயலர் மற்றும் தகவல் தொடர்பு துறைக்கும் செயலர் சிவசங்கருக்கு நெருக்கமானவர் என்று கூறப்பட்டது.இதன்காரணமாக, எம்.சிவசங்கரின் பதவி பறிக்கப்பட்டது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் தலைமறைவாகி உள்ளார்.

நாடு முழுவதும் பரபரப்பை உண்டாக்கிய இந்த வழக்கை விசாரிக்க மத்திய புலனாய்வு குழுவை கேரளா அனுப்பி வைக்கவேண்டும் என்றும் அந்த குழுவிற்கு கேரள மாநில அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியிருந்தார்.எனவே கேரள தங்க கடத்தல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம்  உத்தரவு பிறப்பித்தது.இந்நிலையில் இந்த விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் தயார் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Latest news

Related news