நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் இடம்பெறும் வரலாற்று சிறப்புமிக்க செங்கோல்…

நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் மன்னர் கால வரலாற்று புகழ் மிக்க செங்கோல் இடம்பெற உள்ளது.

நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் கட்டுமானப்பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டு வரும் மே 28 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழகத்தில் இருந்து வழங்கப்பட்ட செங்கோல் இடம்பெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். முழுதும் தங்கத்தால் ஆன இந்த செங்கோலின் உச்சியில் நந்தியின் உருவம் இடம்பெற்றுள்ளது.

இந்த செங்கோலை பிரதமர் மோடி, புதிதாக திறக்கப்படும் நாடாளுமன்ற அலுவலகத்தில் வைப்பார் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து அமித்ஷா தனது ட்விட்டரில் 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவுக்கு அதிகாரம் மாற்றப்பட்டதன் சின்னம் இந்த செங்கோல் என குறிப்பிட்டுள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அமிர்த காலின் தேசிய அடையாளமாக மக்களவை சபாநாயகர் மேடைக்கு அருகில், இந்த செங்கோல் இடம்பெறும் எனவும், இந்த செங்கோல் நியாயமான மற்றும் சமமான ஆட்சிக்கான அடையாளம் என தெரிவித்தார்.

author avatar
Muthu Kumar