பிரதமர் மோடியின் பயணம்… இருநாட்டு இடையேயான உறவை வலுப்படுத்தியது: ஆஸ்திரேலிய பிரதமர்

பிரதமர் மோடியின் பயணம் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான உறவை வலுப்படுத்தியது என ஆஸ்திரேலிய பிரதமர் பதிவு.

அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருக்கிறார். சிட்னியில் உள்ள அட்மிரால்டி மாளிகையில் பிரதமர் மோடிக்கு மரியாதை நிமித்தமாக மரியாதை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடியின் ஆஸ்திரேலியா பயணம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தியுள்ளது என்று அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்தார்.

இதுதொடர்பான அறிக்கையில், பிரதமர் மோடியின் ஆஸ்திரேலியா பயணம், இந்தியாவுடன், ஆஸ்திரேலியா நெருங்கிய மற்றும் வலுவான உறவை வலுப்படுத்தியுள்ளது. இது நாம் முதலீடு செய்ய வேண்டிய உறவு. இந்தியாவுடனான நமது வலுவான கூட்டாண்மை வர்த்தகம், முதலீடு மற்றும் வணிகம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் ஆஸ்திரேலியாவுக்கு நன்மைகளை வழங்கும்.

மூன்று நாடுகளுக்கான பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் சிட்னி வந்தடைந்தார். பிரதமர் மோடியை, அவர் ஆறு முறை சந்தித்ததாகவும், இது ஆழமான உறவுகளுக்கு எடுத்துக்காட்டு என்றார். இந்திய-ஆஸ்திரேலிய சமூகத்தின் பங்களிப்புகளால் ஆஸ்திரேலியா சிறந்த இடமாக இருப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையே அதிக தொடர்புகளைப் பார்க்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியா-இந்தியா பசுமை ஹைட்ரஜன் பணிக்குழுவை நிறுவுவதற்கான முன்னேற்றத்தை பிரதமர்கள் வரவேற்றனர். ஆஸ்திரேலியா-இந்தியா உறவுகளுக்கான புதிய மையம் பரமட்டாவில் தலைமையகம் அமைக்கப்படும் என்று பிரதமர் அல்பானிஸ் மற்றும் வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் அறிவித்தனர்.  இந்த மையம் இந்த மாதம் செயல்படத் தொடங்கியது. வணிகம், கொள்கை மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் மற்றும் இந்திய புலம்பெயர் சமூகங்களுடன் இணைந்து இந்தியாவுடன் ஆழமான ஈடுபாட்டை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்