மகிழ்ச்சியான செய்தி : இந்தியாவில் குறைந்தது கொரோனா பாதிப்பு…! 3 ஆயிரத்திற்கு கீழ் சென்ற கொரோனா உயிரிழப்பு…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,471 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 2,726 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,95,70,881 ஆக அதிகரித்துள்ளது.

  • கடந்த 24 மணி நேரத்தில் 60,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 9,950 ஆயிரம் குறைவாக உள்ளது.
  • கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 2,95,70,881 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 2,726 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 3,77,031 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,17,525 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,82,80,472  ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9,13,378 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாட்டில் இதுவரை 25,90,44,072 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.