முழு ஊரடங்கு தளர்த்தப்பட்ட முதல் ஞாயிறு.! சமூக இடைவெளியை காற்றில் பறத்தி கூட்ட்டத்தால் அலைமோதிய சென்னை.!

முழு ஊரடங்கு தளர்த்தப்பட்ட முதல் ஞாயிறான இன்று சென்னையில் பல இடங்களில் சமூக இடைவெளியை காற்றில் பறத்தி மக்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இபாஸ் முறை ரத்து, பேருந்து சேவைக்கு அனுமதி, வழிப்பாட்டு தலங்கள் திறக்க அனுமதி, வரும் 7ஆம் தேதி முதல் ரயில்களை இயக்க அனுமதி, ஞாயின்றன்று முழு ஊரடங்கு ரத்து உள்ளிட்ட கட்டுபாட்டுகளுடன் கூடிய பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது .

அந்த வகையில் இன்று தளர்வுகளை அறிவித்த முதல் ஞாயிறு என்பதால் காசிமேடு பகுதியில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலையிலேயே மாஸ்க் அணியாமலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை காற்றில் பறத்தி விட்டு மீன் வாங்க மக்கள் கூட்டம் அலை மோதியது. அது மட்டுமின்றி சென்னை தீநகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் கூட்டம் கூட்டமாக விளையாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. பொது மக்கள் ஊரடங்கால் பல சிக்கல்களை சந்தித்து வந்ததால் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. ஆனால் அவர்கள் சுய கட்டுபாடின்றி சுற்றி வருவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் தேவைக்கு மட்டும் வெளியே சென்று பாதுகாப்பாக விதிக்கப்பட்டுள்ள தளர்வுகளை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.