ஸ்காட்டிஷ் பிரீமியர் லீக்கில் கோல் அடித்து சாதனை படைத்த முதல் இந்திய வீராங்கனை .!

ஸ்காட்லாந்து அணியான ரேஞ்சர்ஸ் கால்பந்து கிளப்புக்காக தனது முதல் கோலை இந்திய கால்பந்து வீராங்கனை பாலா தேவி அடித்தார். ஐரோப்பிய லீக்கில் கோல் அடித்த முதல் இந்திய பெண் வீரர் என்ற பெருமையை மூத்த கால்பந்து வீரர் பாலா தேவி பெற்றுள்ளார். நேற்று ஸ்காட்டிஷ் பிரீமியர் லீக்கில் ரேஞ்சர்ஸ் அணிக்காக விளையாடிய பாலா தேவி மதர்வெல் மகளிர் எஃப்சிக்கு எதிராக தனது முதல் கோலை அடித்தார்.

இந்த போட்டியில் ரேஞ்சர்ஸ் மதர்வெல்லின் அணியை 9-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. பாலா தேவி 85 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து வரலாற்று சாதனையை படைத்தார். இதன் மூலம், ஐரோப்பிய லீக்கில் கோல் அடித்த முதல் இந்திய பெண் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இந்த சீசனில் அவர் ரேஞ்சர்ஸ் பெண்களுக்காக பாலா தேவி  சிறப்பாக மதர்வெல்லுக்கு எதிரான போட்டியில் பாலா தேவி 9 வது கோலை அடித்து அணி ஒரு பெரிய வெற்றியை செல்வதற்கு முக்கிய பங்கு வகித்தார். அவர்களைத் தவிர, கிர்ஸ்டி ஹோவெட் மற்றும் லிஸி ஆர்னோட் ஆகியோர் ஹாட்ரிக் கோல் அடித்தனர். அதே நேரத்தில், மேகன் பெல் மற்றும் டயானா போர்மா ஆகியோரும் தலா ஒரு கோல் அடித்தனர்.

 

author avatar
murugan