கொரோனா தொற்றால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு 2 வருடம் சம்பளம் வழங்கப்படும்…! பஜாஜ் ஆட்டோ அதிரடி அறிவிப்பு…!

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு 2 வருடம் சம்பளம் வழங்கப்படும் என பஜாஜ் ஆட்டோ அறிவித்துள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் இந்தியாவை பொருத்தவரையில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் காட்டு தீ போல் பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல மாநிலங்களில் பொதுமுடக்கம் அமல்ப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,கொரோனாவால் உயிரிழந்த மக்களுக்கு சில நிறுவனங்கள் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆதரவளிக்கும் வகையில், பல உதவிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பஜாஜ் ஆட்டோ 3 மற்றும் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்கள்கொரோனா  உயிரிழந்திருந்தால், அவர்களது குடும்பங்களுக்கு இரண்டு வருடங்களுக்கு தொடர்ந்து சம்பளம் வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் ஊழியர்கள் குடும்பத்தின் குழந்தைகளின் கல்வி பொறுப்பையும் அவர்களை ஏற்றுக் கொள்வதாகவும், நிறுவனம் வழங்கும் மருத்துவ காப்பீடு இறந்தவர்களின் குடும்பத்திற்கு 5 ஆண்டுகள் நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.