பட்டியலினத்தவரை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்த விவகாரம்.! பேச்சுவார்த்தை நிறைவு.! சீல் அகற்றம்.!

பட்டியலினத்தவரை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நிறைவு பெற்று  கோவில் சீல்-ஐ மாவட்ட ஆட்சியர் அகற்றினார்.

கரூர் மாவட்டம் வீரணாம்பட்டியில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் கடந்த வைகாசி திருவிழாவின் போது பட்டியலின இளைஞர் கோவிலுக்கு வழிபட சென்றுள்ளார். அப்போது அங்குள்ள மாற்று சமூகத்தினர் அவரை உள்ளே விட மறுத்துள்ளனர்.

இந்த விவகாரம் இரு தரப்பினரையே பிரச்சனையாக உருவெடுக்க, வருவாய் கோட்டாட்சியர், காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் சுமூக முடிவு எட்டப்படாத காரணத்தால் வீரணாம்பட்டி காளியம்மன் கோவிலுக்கு கடந்த 8ஆம் தேதி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதனை அடுத்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் இரு தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சுமூக முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கோவில் சீலை அகற்றினார் . அதன் பிறகு பட்டியலின இளைஞர் உட்பட அனைவரும் ஒன்றாக கோவிலில் வழிபாடு நடத்தினர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.