கனமழை எச்சரிக்கை.! சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை.!

மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை எச்சரிக்கை காரணமாக 2 நாட்களுக்கு சதுரகிரி மலைக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை செய்துள்ளது. 

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை கடந்த காரணத்தால் இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. குறிப்பாக திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதே போல, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால், புதுக்கோட்டை கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது. மேலும் , மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால் தற்போது ஓர் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி மலைப்பகுதிக்கு பக்தர்கள் செல்ல 2 நாட்களுக்கு தடை விதிக்கப்ட்டுள்ளது. வழக்கமாக பௌர்ணமி, அமாவாசை நாட்களை முன்னிட்டு மட்டும் மாவட்ட நிர்வாகம் சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி அளிக்கும்.

அதன்படி, நாளை 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரையில் தற்போது அனுமதி வழங்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் 2 நாட்களுக்கு சதுரகிரி மலை செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment