விளையாட சென்ற சிறுவனுடன் வந்த மான் குட்டி…! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

டோமினிக் விளையாடிவிட்டு வீடு திரும்புகையில் குட்டி மான் ஒன்றையும் தன்னுடன் அழைத்து வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

அமெரிக்க நாட்டில் ஸ்டீபனி பிரவுன் என்பவர் தனது குடும்பத்தாருடன் இணைந்து விடுமுறையை கழிப்பதற்காக வர்ஜினியா மாகாணத்திற்கு சென்றுள்ளார். அவர் அங்குள்ள தேசிய பூங்கா அருகே ஒரு ரிசார்ட்டில் தங்கி இருந்துள்ளார். அப்போது அவருடைய நான்கு வயது மகனான டோமினிக் தனது நாய் குட்டியுடன் சிறிது நேரம் சென்று விளையாடுவதற்காக சென்றுள்ளார்.

அப்போது டோமினிக் விளையாடிவிட்டு வீடு திரும்புகையில் குட்டி மான் ஒன்றையும் தன்னுடன் அழைத்து வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இதைக் கண்டு ஆச்சரியமடைந்த சிறுவனின் தாய் உடனடியாக தன் மகனுடன் மான் நின்றதை புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.