தன்னலம் இன்றி பணியாற்றிய டாக்டர் வி.சாந்தா அவர்களின் இறப்பு புற்றுநோய் துறைக்கு ஈடு செய்ய முடியாதது – துணை முதல்வர்!

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் பணி செய்து வந்த டாக்டர் வி.சாந்தா அவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இவர்களது இழப்பு புற்றுநோய் துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என துணை முதல்வர் பன்னீர்செல்வம் அவர்கள் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரும் சமூக சேவகருமான டாக்டர் வி.சாந்தா அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். 93 வயது உடைய இவரது வாழ்நாள் பலருக்கும் வாழ்வளித்த ஒன்றாக இருந்துள்ளது. இந்நிலையில் இவரது இழப்பிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 65 ஆண்டுகளுக்கு மேலாக தனது ஓய்வற்ற சமூக சேவை மூலம் அனைத்து தரப்பு மக்களின் அன்பையும் பெற்ற வி.சாந்தா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும், பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ள இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை தன்னலமின்றி அர்ப்பணிப்போடு செயல்பட்டு மீட்டெடுக்க பணியாற்றியதால் மாண்புமிகு அம்மா அவர்கள் உட்பட அனைவரது பாராட்டுகளையும் பெற்றவர் எனவும், இவர் காலமான செய்தி அறிந்து தான் மிகுந்த வேதனை அடைந்ததாகவும் இவரது மறைவு புற்றுநோய் துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு எனவும் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,

author avatar
Rebekal