கொரோனா வைரஸ் இந்த ஆண்டுக்குள் முடிவுக்கு வருவது சாத்தியமற்றது – WHO

கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்துவிடும் என மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது சாத்தியமற்றது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ், கடந்த ஆண்டு முழுவதும் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை தடுக்க மருந்து கண்டுபிடிக்கும் பணியில், உலக நாடுகள் தீவிரமாக இறங்கியது. தற்போது, இந்த வைரஸை தடுக்க தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பல நாடுகளில் இந்த வைரஸை தடுப்பதற்கான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் தலைமை மருத்துவர் மைக்கேல் ரையான் அவர்கள் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்துவிடும் என மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது சாத்தியமற்றது. தடுப்பூசியால் மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்படும் அளவும், உயிரிழப்பும் குறையுமே தவிர, கொரோனா வைரஸ் முடிவுக்கு வராது என்று தெரிவித்துள்ளார்.

நாம் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால், பாதிப்பிலிருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது, உயிர் இழப்பையும் தடுக்கலாம். தற்போதைய புள்ளிவிவரங்களின்படி, கொரோனா, தடுப்பூசியால் கட்டுக்குள் வரும். அதை அப்படியே நாம் வேகப்படுத்தி கொண்டு சென்றால், நாம் கொரோனாவை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரலாம். ஆனால் இப்போதுள்ள சூழலில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது.’ என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.