கொரோனா தடுப்பூசியின் இடைக்கால முடிவுகாக காத்திருக்கும் – மாடர்னா

நவம்பர் மாதத்தில் கொரோனா தடுப்பூசியின் இடைக்கால முடிவுகளை மாடர்னா தலைமை நிர்வாக அதிகாரி எதிர்பார்க்கிறார். 

அமெரிக்க நிறுவனமான மாடர்னா இன்க் அதன் கொரோனா தடுப்பூசி சோதனையிலிருந்து அடுத்த மாதம் அதன் இடைக்கால முடிவுகளை அந்நிறுவத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பான்செல் எதிர்பார்க்கிறார். மேலும், டிசம்பர் மாதத்தில் அமெரிக்க அரசாங்கம் அந்த தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருடாந்திர தொழில்நுட்ப காணொளி காட்சி மூலம் பேசிய ஸ்டீபன் பான்செல், தடுப்பூசியின் ஆய்வின் போதுமான இடைக்கால முடிவுகளைப் பெறுவதற்கு அதிக நேரம் எடுக்கும் என்றும், தடுப்பூசியைப் பயன்படுத்த அரசாங்கத்தின் அனுமதி அடுத்த ஆண்டு வரை வரக்கூடாது என்றும் கூறினார்.

மாடர்னா தனது கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு நவம்பர் 25 ஆம் தேதிக்கு முன் விண்ணப்பிக்கத் தயாராக இல்லை என்று கூறியிருந்தது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.