உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழப்பு.! உத்திர பிரதேசத்தில் ஆய்வு குழு தீவிர ஆய்வு.!

உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள மருந்து தொழிற்சாலையில் மத்திய மாநில குழுக்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

உஸ்பெகிஸ்தானில் இருமல் மருந்து சாப்பிட்ட குழந்தைகளில் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அந்த மருந்து தொழிற்சாலையில் ஆய்வு நடைபெற்று முடிந்துள்ளது.

புகார் கூறப்பட்ட மரியன் பயோடெக் நிறுவனமானது உத்திர பிரதேச மாநிலத்தில் நொய்டா நகரில் இருக்கிறது. அங்கு, மத்திய ஆய்வு குழுவும், உத்திர பிரதேச மாநில ஆய்வு குழுவும் இணைந்து மருந்து தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மரியன் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் தற்போது புகார் கூறப்பட்ட ‘டாக்-1 மேக்ஸ்’ எனும் மருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதில்லை. அது உஸ்பெகிஸ்தானில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment