#Breaking:சிறார்களுக்கு தடுப்பூசி முன்பதிவு – மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவு ஜனவரி 1 முதல் தொடங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

வருகின்ற ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து 15 – 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும்,முன்களப் பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தும் பணி ஜனவரி 10 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்றும் பிரதமர் மோடி நேற்று முன்தினம் தெரிவித்தார்.

இந்நிலையில்,நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு https://www.cowin.gov.in/ என்ற இணைய தளத்தில் ஜனவரி 1 முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, CoWIN இணையதளத்தில் முன்பதிவு செய்யும்போது ஆதார் கார்டு இல்லாதவர்கள் 10 ஆம் வகுப்பு ஐடி கார்டை பயன்படுத்தி தடுப்பூசிக்கான முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக,கோவின் இயங்குதளத் தலைவர் டாக்டர் ஆர்.எஸ்.சர்மா கூறியதாவது:

“15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஜனவரி 1 முதல் CoWIN செயலியில் கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு செய்து கொள்ளலாம்.பதிவு செய்வதற்கு கூடுதலாக (10வது) அடையாள அட்டையைச் சேர்த்துள்ளோம் .சிலரிடம் ஆதார் அல்லது பிற அடையாளங்கள் இல்லாததால் மாணவர் அடையாள அட்டை அட்டைகள்(ஐடி கார்டுகள்)சேர்க்கப்பட்டுள்ளது.