வங்கிகளின் வட்டிக்கு (கந்து)வட்டி..! வசூலிக்க தடை!

2கோடி ரூபாட் வரையிலான கடன்களுக்கு வட்டி மீது வட்டி விதிக்கப்படாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரங்கு காலத்தில் 6 மாதங்களுக்கு மாதாந்திர தவணையை ஒத்தி வைக்க வங்கிகள் சலுகை அளித்துள்ளது.ஆனால் கட்டாத தவணைகளின் மீது வட்டிக்கும் வட்டி விதிக்கப்படுவது தொடர்பாக சர்ச்சை எழுந்தது.இது தொடர்பான வழக்கில் நேற்று உச்சநீதிமன்றத்தில் பதில் மனுவைத் தாக்கல் செய்த மத்திய அரசு 2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு வட்டி மீது வட்டி விதிக்கப்படாது என்று தெரிவித்துள்ளது.இதனால் வங்கிகளின் தவணைக் கட்டத் தவறியவர்களுக்கும் சிறுதொழில் புரிபவர்களுக்கும் பலன் கிடைக்கும் என்று அரசுத் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளது.



author avatar
Kaliraj