திருமணம் முடிந்த கையுடன் மெரினாவில் பனை மரம் நட்ட மணமக்கள்.!

திருமணம் முடிந்த கையுடன் சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் சமூக சேவைகளை செய்து வரும் மணி மற்றும் அனிதா தம்பதியினர் பனை மரம் நட்டுள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக சமூக சேவைகளில் தொடர்ந்து செயல்பட்டு வருபவர்கள் லயோலா மணி மற்றும் அனிதா. இவர்கள் ஊரடங்கு காலத்தில் கூட பல வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி பல உதவிகளை செய்தனர் . கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள வடபழனியில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்த கையுடன் சென்னையில் உள்ள மெரினா கடற்கரை சென்று அப்பகுதியில் ஏராளமான பனை விதைகளை பல இடங்களில் நட்டு வைத்து சமூக பணிகளில் ஈடுபட்டனர். இதுகுறித்து மணமக்கள் கூறிய போது, தமிழர்களுக்கான மரமும், பல பலன்களை தரக் கூடிய பனை மரம் தற்போது அழிந்து வருவதாகவும், அதனை மீட்டெடுப்பதற்கான தங்களது ஒரு சிறிய முயற்சி என்றும் கூறியுள்ளனர். மரத்தை நடுவது மட்டுமில்லாமல் அடிக்கடி கடற்கரைக்கு வந்து மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்கவும் இருவரும் முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளனர். ஏற்கனவே பல லட்சக்கணக்கான பனை மரங்களை ‘காக்கை’ என்ற அமைப்பு நட்டு வருவது குறிப்பிடத்தக்கது.