தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.!

நெல்லிக்கா ஜூஸ் குடிப்பதால் முகம் அழகான தோற்றம் அளிக்கும், உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும். 

அனைத்து மருத்துவ குணங்களும் நிறைந்திருக்கும் கனி என்றால் நெல்லிக்கனி என்று கூறலாம், சிரியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள், இந்த நெல்லிக்கனியை ஜூஸ் போட்டு தினமும் குடித்தால் என்ன நன்மை என்று பார்க்கலாம் வாருங்கள். 

நன்மைகள்:

நெல்லிக்காவில் வைட்டமின் C சத்து அதிகமாக இருப்பதால் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது, நெல்லிக்கா ஜூஸ் துவப்புடன் இருக்கும், துவர்ப்பாக இருப்பதால் அதனை குடிக்காமல் இருப்பது மிகவும் தவறு, இந்த நெல்லிக்காய் ஜூஸை தினமும் குடித்து வந்தால் அதனுடைய பலன் உங்களால் உணரமுடியும். 

நெல்லிக்கா ஜூஸ் தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும், நெல்லிக்கா ஜூஸ்யுடன் சிறிதளவு தேன் கலந்து தொடர்ந்து குடித்து வந்தால் ஆஸ்துமா பிரச்சனை தீரும். 

நெல்லிக்கா ஜூஸ் தினமும் இரண்டு முறை குடித்தால் சிறுநீரக எரிச்சல் நீங்கும் மாதவிடாய் காலத்தில் அதிகமாக இரத்த போக்கு ஏற்படும் பொழுது நெல்லிக்கா ஜூஸ் மற்றும் வாழைப்பழம் சாப்பிட்டால் சரி செய்து விடலாம். 

நெல்லிக்கா ஜூஸ்யுடன் தேன் கலந்து தொடர்ந்து குடித்து வந்தால் உங்கள் முகம் அழகாக தோற்றம் அளிக்கும், மேலும் உடல் அதிகம் வெப்பம் இருப்பவர்கள் குடித்து வந்தால் உடலுக்கு குளிர்ச்சி தரும். 

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.