திவாலானது தாமஸ் குக் நிறுவனம் ! 6 லட்சம் பயணிகள் தவிப்பு !

உலகின் மிக பழமைவாய்ந்த சுற்றுலா தளமும் மிக பெரிய பயண நிறுவனமுமான தாமஸ் குக் எனும் நிறுவனம் திவாலாகிவிட்டதாக அறிவிக்க பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இந்த நிறுவனம் சமீபகாலமாக கடும் தொழில் சரிவை சந்தித்து வந்ததால் இந்த நிறுவனத்திற்கு 250 மில்லியன் டாலர் அளவிற்கு தொகை தேவை பட்டதால் இந்த நிறுவனம் திவாலானதாக அறிவிக்க பட்டுள்ளது.

மேலும் அந்த பணத்தை திரட்டுவதற்கான முயற்சிகள் ,பேச்சு வார்த்தைகள் பயன் அளிக்காததால் இந்த நிறுவனம் திவாலானதாக தற்போது தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிக்க பட்டுள்ளது.

இதனால் இந்த விமான நிறுவனத்தின் விமான சேவைகள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளது. இந்த அறிவிப்பால் இந்த விமனநிறுவனத்தில் பணியாற்றி வந்த 21,000 பேர் வேலையை இழந்துள்ளார்கள்.

இந்த திடீர் நடவடிக்கையால் உலகம் முழுவதும் 6 லட்சம் சுற்றுலா பயணிகள் தவிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பலரின் டிக்கெட்களும்  ரத்தானது.மேலும் தாமஸ் குக் மூலம் ஒன்றரை லட்சத்திற்கும் மேலான சுற்றுலா பயணிகள் உல்லாச பயணம் மற்றும் ஹோட்டல் என முன்பதிவு செய்திருந்தவர்கள் பிரிட்டிஷ் நாட்டை  சேர்ந்தவர்கள்.