குழந்தை அழுகிறதா காரணம் வாயுத்தொல்லையாக கூட இருக்கலாம்!!!அதை குணப்படுத்தும் பாட்டிவைத்தியம்

நமது வீட்டின்  முதன்மையான செல்வமே குழந்தை செல்வம் ஆகும்.அத்தகைய குழந்தை செல்வங்கள் எப்போதும் ஆரோக்கியமாகவும் மற்றும் மகிழ்ச்சியாகவும் இருப்பததே நம் அனைவரின் விருப்பம் ஆகும்.ஆனால் சில நேரங்களில் அவர்கள் எதற்க்காக அழுகிறார்கள் என்பது  நமக்கு தெரியாது. அதற்கான காரணம் வாயு தொல்லையாக கூட இருக்கலாம்.
குழந்தைகள் அழுவதற்க்கான காரணங்கள் :
Related image
குழந்தைகள் வாயுத்தொல்லையால் அழுவதை நாம் எவ்வாறு கண்டறிவது?
குழந்தைகள்  நாள் முழுவதும் உணவு  உட்கொள்ளுவதால் குடல் அதிக அளவு வாயுவை உற்பத்தி செய்கிறது.வாயுத்தொல்லை உள்ள உணவுகளை தாய்மார்கள் உண்ணும் போது குழந்தைகளுக்கு வாயுத்தொல்லை ஏற்படுகிறது. மேலும் உடலில் இருக்கும் இயற்கை சர்க்கரை பொருள்களான ப்ரெக்டொஸ் ,லெக்டோஸ் மற்றும் லேபினோஸ் போன்றவை ஜீரணிக்காத போது இவை குடலை நோக்கி செல்லும் .எனவே குடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் வாயு மற்றும் வயிறு உப்பிசத்தை ஏற்படுத்தும்.
வாயுத்தொந்தரவை  எவ்வாறு தடுக்கலாம் :
தாய்மார்கள் குழந்தைகளுக்கு பால் புகட்டும் போது தலைப்பகுதி மேடாகவும் வயிற்றுப்பகுதி கீழாகவும் இருக்குமாறு வைத்து பால் புகட்ட வேண்டும்.குழந்தைகளுக்கு பால் புட்டியில் பால் கொடுக்கும் போது பால் புட்டி சிறிய துளை உடையதாக பார்த்து கொள்ள வேண்டும் .
Related image
ஒவ்வொரு முறையும் தாய்ப்பால் கொடுத்த பிறகு அவர்களை படுக்க வைக்க கூடாது .அவர்களை தோலில் போட்டு முதுகைத்தட்டிக் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது குழந்தைகளுக்கு உணவு விரைவில் ஜீரணமாகும்.
வாயுவில் இருந்து விடுபட சில வழிமுறைகள் :
Related image

  • கடுகு எண்ணையை சூடாக்கி வெதுவெதுப்பாக குழந்தைகளுக்கு உடல் முழுவதும் மசாஜ் கொடுக்க வேண்டும் .இவ்வாறு செய்வதால் உடல் பொலிவு பெறும் .மேலும் குழந்தைகள் நன்றாக உறங்குவதற்க்கு இது உதவியாக இருக்கும்.
  • ஒரு  காட்டன் துணியை எடுத்து அதை வெதுவெதுப்பான நீரில் நனைத்து குழந்தைகளின் வயிற்றுப்பகுதியில் போட வேண்டும்.இவ்வாறு போடும் போது குழந்தைகளின் வயிறு உப்பிசம் நீங்கி அழுகையை  உடனே நிறுத்துவார்கள்.
  • ஆறு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு சிறிதளவு கொதிக்கும் நீரில் ஓமம் கலந்து காய்ச்சி அதை வடிக்கட்டி சிறிது நேரத்திற்கு ஒரு முறை இடைவெளி விட்டுக்கொடுக்க வேண்டும்.

 

Leave a Comment