விமானத்தில் ஏறி காஷ்மீர் பறந்த ‘தளபதி 67’ படக்குழு…! வீடியோ வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்.!

வாரிசு படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக தனது 67-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தளபதி 67 என்று தற்காலிகமா தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

Thalapathy67
Thalapathy67 Image Source Twitter

படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தில் த்ரிஷா. மன்சூர் அலிகான்,சஞ்சய் தத்,ப்ரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டர், அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன், மேத்யுவ் தாமஸ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

Thalapathy67 TITLE is loading
Thalapathy67 TITLE is loading Image Source Twitter

இதனையடுத்து, படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் நிறுவனம் தொடர்ந்து அப்டேட்கள் கொடுத்து தளபதி 67 படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்து வருகிறது. அந்த வகையில், இன்று தளபதி 67 படத்தின் தலைப்பு என்ன என்பதை மாலை 5 மணிக்கு வெளியிடஉள்ளது.

இதற்கிடையில். தற்போது படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. எனவே, படப்பிடிப்பிறகாக காஷ்மீர் படக்குழு விமானத்தில் ஜாலியாக சென்ற வீடியோவை 7 ஸ்க்ரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. வீடியோவில் விஜய் விமானத்தில் ஏறி அனைவரையும் பார்த்து கை அசைத்து செல்கிறார். மேலும் வீடியோவில் படக்குழுவுடன் விக்ரம் படத்தில் நடித்த ஏஜென்ட் டினாவும் செல்கிறார். எனவே அவரும் படத்தில் நடிக்கிறார் என தெரிகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment