மீண்டும் மெர்சல் தயாரிப்பாளருடன் இணையும் தளபதி.! ‘தளபதி 66’ குறித்த மாஸ் தகவல்.!

தளபதி விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் தளபதி-66 படத்தினை மெர்சல் பட தயாரிப்பாளரான தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்று வருகிறது .இதனை தொடர்ந்து விஜய் அவர்கள் கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தினை நடிக்கவுள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார் .இதனை தொடர்ந்து விஜய்யின் 66-வது படத்தினை இயக்க போவது யார் என்ற‌ கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.இந்த நிலையில் தற்போது தளபதி 66 குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது தளபதியின் 66வது படத்தினை தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன . ஏற்கனவே விஜய்யின் மெர்சல் திரைப்படத்தை தேனாண்டாள் நிறுவனம் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் தளபதி 66 படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்க அதிகம் வாய்ப்பு உள்ளதாகவும் , அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன .இது ஒருபுறம் இருக்க மறுபுறம் தளபதி 66 படத்தினை தெலுங்கில் பல படங்களை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.இதில் தளபதி 66 படத்தினை தயாரிப்பது உண்மையில் யார் என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும்.