தீவிர கேங்க்ஸ்டர் த்ரில்லராக உருவாகும் தளபதி 65..!!

தளபதி 65 திரைப்படம் தீவிர கேங்க்ஸ்டர் த்ரில்லராக உருவாகும் படம் என்று  லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது. 

கடந்த பொங்கலை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் சாதனையை படைத்தது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு சென்னையில் வைத்து படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் கிடைத்த தகவல் என்னவென்றால் படத்தில் நடிகர் விஜய் கேரக்டர் பாசிடிவ், நெகடிவ், காமெடி என மூன்று கேரக்ட்டரில் நடிப்பதாகவும் தீவிர கேங்க்ஸ்டர் த்ரில்லராக படமாக எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்த படத்தை இய்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். சன்பிக்ச்சர் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். மேலும் விஜய்க்கு ஜோடியாக நடிகை  பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.