வலிமை பட பாடலுக்காக காத்திருக்கும் பிரபல நடிகை.!

நடிகை பூனம் பாஜ்வா தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நடத்தி அவர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். 

தமிழ் சினிமாவில், தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார். தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நேர் கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் இப்படத்தின் அரைக்கட்ட படப்பிடிப்பு முடிந்ததாகவும் செய்திகள்  வெளியாகின. மேலும் இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். எனவே ரசிகர்கள் பலர் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

தற்போது ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் ரசிகர்களிடம் உரையாடல் நடத்தி நேரத்தை செலவிடட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை பூனம் பாஜ்வா தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நடத்தி அவர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில் ரசிகர் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா குறித்து ஏதாவது ஒன்று கூறுங்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர் “லிட்டில் மேஸ்ட்ரோ” என்றும் அவரது வலிமை பட பாடல்களுக்காக மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறேன் என்றும் பதிலளித்துள்ளார்.