#VerySoon….. ரசிகர்களுக்கு வலிமை அப்டேட் கொடுத்த தல…!

அஜித்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரசிகர்கள் வலிமை அப்டேட் பற்றி கேட்டதற்கு மிக விரைவில் என்று கூறியுள்ளார். 

இயக்குனர்  .எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமைஉருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்மரமாக நடைபெற்று வருகிறது .அப்டேட்டை காத்திருக்கும் தல ரசிகர்களுக்கு தல அஜித்தின் புகைப்படங்கள் மற்றும் வலிமை படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியாகும் புகைப்படங்கள் தான் மகிழ்ச்சியை அளிக்கிறது.அதனை டிரெண்ட் செய்து நிம்மதியை தேடுகின்றனர்.

இந்த நிலையில் தற்போது தல அஜித் ரசிகர்களுடன் இணைந்து எடுத்து கொண்ட அழகான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.அதாவது அவர் பைக் ரைடிங் செல்லும் போது ரசிகர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொள்வதும் ,அது வைரலாவதும் நடந்து வருகிறது.இந்த நிலையில் பல ரசிகர்கள் தற்போது தல அஜித்துடன் புகைப்படம் எடுத்துள்ளனர் .அதனை பார்த்த நெட்டிசன்கள் அவர்களுக்கு எல்லாம் என்ன லக் , அது நமக்கு இல்லையே என்று ஒருபுறம் கவலையிலும் உள்ளனர். அது மட்டுமின்றி தல அஜித் சிங்கிளாக எடுத்து கொண்ட அவரது ஹேன்ட்சம் புகைப்படமும் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.