தல 62..! மீண்டும் இணையும் மிரட்டலான கூட்டணி ..?

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து சத்யஜோதி தயாரிக்கும் படத்தில் நடிகர் அஜித் மீண்டும் நடிக்கவுள்ளதாக தகவல். 

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துள்ள நிலையில், படத்திற்கான படப்பிடிப்பு 5 நாட்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், படப்பிடிப்புக்காக படக்குழுவினர் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கான மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த மாதம் டீசர் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அஜித்தின் 61 -வது படத்தை மீண்டும் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தையும்,  தயாரிப்பாளர் போனி கபூர்  தயாரிக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும், தகவல்கள் பரவி வருகிறது. வலிமை படப்பிடிப்பு முடிந்தவுடன் தல 61 குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தல 61 படத்தை தொடர்ந்து தல 62 படம் குறித்த தகவல் தற்போது பரவி வருகிறது, அதாவது அஜித்தின் 62-வது படத்தை வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாகவும், படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றார்கள்.

மேலும் தல 61- படத்திற்கு நடிகர் அஜித் குமார் ஜனவரி மாதம் முதல் கால்ஷீட் ஒதுக்க வாய்ப்பு எனவும், இதனால் அடுத்த வருடம் அஜித் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.