டெஸ்லா 2வது காலாண்டில் 466,140 கார்களை விற்பனை செய்து சாதனை..!

டெஸ்லா 2023ம் ஆண்டின் 2வது காலாண்டில் 466,140 கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க்கின் அமெரிக்க மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, இந்த 2023ம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் உலகளவில் 466,140 கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

கடந்த சில மாதங்களில் இந்நிறுவனம் தள்ளுபடிகள் மற்றும் ஊக்கத்தொகைகளை அதிகரித்ததால் விற்பனைகள் முந்தைய ஆண்டைவிட 83% அதிகரித்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் 258,580 கார்களில் இருந்து 85.5% முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது.

இதற்கிடையில், இந்தியாவில் மின்சார வாகனம் வேகமாக வளர்ந்து வருவதனால், இந்தியாவில் முதலீடு செய்யுமாறு டெஸ்லாவிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். பிரதமர் மோடியை சந்தித்த பிறகு, எலான் மஸ்க் அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

மேலும், டெஸ்லாவின் அடுத்த புதிய தொழிற்சாலை அமைய இருக்கும் இடம் பற்றிய தகவல் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.