இந்தியாவில் டெஸ்லா கார்கள் அறிமுகம்..? பிரதமர் மோடியை சந்தித்த பிறகு எலான் மஸ்க்..!

இந்தியாவில் டெஸ்லா கார்கள் விரைவில் அறிமுகமாகும் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.

மூன்று நாள் அரசு முறை பயணமாக நேற்று அமெரிக்கா புறப்பட்டு சென்ற பிரதமர் மோடி, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் ட்விட்டர் உரிமையாளருமான எலான் மஸ்க்கை இன்று சந்தித்தார். பிரதமர் மோடியை சந்தித்த அவர் செய்தியாளர்களிடம் நான் மோடியின் ரசிகன் என்று கூறினார்.

பிறகு, பிரதமருடன் இது ஒரு அற்புதமான சந்திப்பு, எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் கலிபோர்னியாவில் உள்ள எங்கள் டெஸ்லா தொழிற்சாலைக்கு வருகை தந்தார். எனவே, நாங்கள் ஒருவரையொருவர் சிறிது அறிந்திருக்கிறோம் என்று எலான் மஸ்க் கூறினார்.

மேலும், இந்திய சந்தையில் டெஸ்லா கார் எப்போது அறிமுகம்..? என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த எலான் மஸ்க், அடுத்த ஆண்டு தான் இந்தியா வருவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், டெஸ்லா இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் என்று நம்புவதாகவும் கூறினார்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.