பெண்களை ரயிலில் கேலி செய்தால்” 3 ஆண்டு சிறை “வருகிறது சட்டம் விரைவில் அமல்…!!

ரயில்களில் பெண் பயணிகளை கேலி செய்வோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை பரிந்துரைக்கப்பட்டது.

Related image

நாட்டில் அண்மைக்காலமாக ரயில்களில் பயணம் செய்யும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுப்பதற்காக பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளதாக ரயில்வே பாதுக்காப்புப்படை தெரிவித்துள்ளது.

இது குறித்து தெரிவித்த ரயில்வே பாதுகாப்பு படைரயில்களில் பெண் பயணிகளை கேலி செய்வோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளோம். இந்திய குற்றவியல் சட்டத்தின்படி பெண்களை கேலி செய்வோருக்கு அதிகபட்சமாக 1 ஆண்டு வரை மட்டுமே சிறை தண்டனை விதிக்க முடியும். எனினும், ரயில்களில் பெண்களை கேலி செய்வோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் ரயில்வே சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.
Related imageஇந்நிலையில் ரயில்களில் பெண்களுக்கான பெட்டிகளில் பயணம் செய்யும் ஆண்களை கைது செய்வதற்கும், பொது பெட்டிகளில் பெண்களுக்கு தொந்தரவு கொடுப்பவர்களை கைது செய்வதற்கும் ரயில்வே போலீஸாரின் உதவியை நாட வேண்டியுள்ளது. அவ்வாறு இல்லாமல் நாங்களே அதாவது ரயில்வே பாதுகாப்புப் படையினரே நடவடிக்கை எடுக்கும் வகையில் ரயில்வே சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.
Related imageதற்போது, பெண்களுக்கான பெட்டிகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. இதை ரூ. 1,000 ஆக உயர்த்த வேண்டுமென பரிந்துரை செய்துள்ளோம். மேலும் இணையவழி டிக்கெட் முன்பதிவில் முறைகேடு செய்வோருக்கு ரூ. 2 லட்சம் அபராதமும், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்க பரிந்துரை செய்துள்ளோம் என்று ரயில்வே பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது.
DINASUVADU
author avatar
kavitha

Leave a Comment