தேனில் இவ்ளோ அழகு குணங்கள் உள்ளதா!

தேன் இயற்கையாகவே கிடைக்கக்கூடிய கெட்டு போகாத பொருள் இது நம்ம உடல்நலத்திற்கு அதிகமாக பயன்படுகிறது,அதே நேரத்தில் இதைப் பயன்படுத்தி நாம் முக அழகையும் முடி அழகையும் அதிகப்படுத்தலாம்.முக்கியமான ஒன்று பயன்படுத்துகின்ற தேனை நல்ல தேனாகவும்,சுத்தமான தேன் ஆக ஆர்கனிக் தேனை உபயோகப்படுத்த வேண்டும் அதுதான் நல்லது.

சிலருக்கு உதடு கருமையாக இருக்கும் அதை என்ன பண்ணினாலும் போகாது ரொம்ப வறண்டு போயிருக்கும் அதற்கான வழி தேனை தினமும் நான்கு அல்லது ஐந்து முறை உதட்டில் வைத்து பேபி பிரஸ் வைத்து மெதுவாக தொடர்ந்து செய்தால் அதிக ரத்த ஓட்டம் அதிகரித்து உதடுகள் சிகப்பாக மாறிவிடும்.

கண்ட கண்ட க்ரீமை முகத்தில் போடுவதற்கு பதிலாக ஒரு ஸ்புன் தேன் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் இரண்டையும் சேர்த்து முகத்தில் அப்ளை செய்தால் உங்கள் முகம் ஜொலி ஜொலிக்கும்,அதே நேரத்தில் தேன் கொஞ்சம் கெட்டியாக இருப்பதால் முதலில் முகத்தை முதலில் கழுவிவிட்டு அதன் பிறகு இந்த தேனும் ஆலிவ் ஆயிலும் சேர்த்து கலவையை முகத்தில் போட்டால் முகம் மெதுவாகவும் அழகாகவும் இருக்கும்.

முக்கியமாக முகத்தில் உள்ள பருக்களை இந்த தேனானது குணப்படுத்துகிறது. அதாவது நிறைய பேருக்கு இருக்கிற ஒரே ஒரு பிரச்சனை முகத்தில் உள்ள பருக்கள் அந்த பருவின் மேல் அந்தத் தேனை விட்டு அரை மணி நேரம் கழித்து காய்ந்த பிறகு குளிர் தண்ணியால் முகத்தை கழுவினால் பருக்கள் நீங்கிவிடும் அந்த பரு இருக்கின்ற தழும்பு மறைந்து விடும்.

மேலும் இதிலும் முக்கியமான என்னவென்றால் முகத்தில் உள்ள கருவளையம் முகத்தின் சுருக்கமும் நீக்குகிறது, இப்போதுள்ள காலகட்டத்தில் எல்லாரும் விரும்புகின்ற ஒரே ஒரு விஷயம் முகம் சுருக்கம் இல்லாமலும் கருவளையம் இல்லாமலும் விரும்புகிறார்கள்.

அதற்கு தேன் உதவுகிறது இந்த தேனை எடுத்து தினமும் தூங்கும் முன் கண் கருவளையத்தை முகத்தில் சுருக்கங்கள் இருக்கும் இடத்திலும் போட வேண்டும் அதன் பிறகு காய்ந்த பிறகு காலையில் எழுத்து தண்ணிரை வைத்து கழுவ வேண்டும் இப்படி தினமும் செய்து வந்தால் முகம் பளபளக்க மாறிவிடும்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.