ஏற்றுமதி டீசல், கச்சா எண்ணெய் மீதான வரி குறைப்பு! இன்று முதல் அமல்!

ஏற்றுமதி டீசல், கச்சா எண்ணெய் மீதான வரிக்குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு அறிவிப்பு.

ஏற்றுமதி செய்யப்படும் டீசல், விமான எரிபொருள் மற்றும் கச்சா எண்ணெய் மீதான எதிர்பாரா லாப வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. அதன்படி, ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான லாப வரியை டன் ஒன்றுக்கு ரூ.49,00 லிருந்து ரூ.1,700 ஆக மத்திய அரசு குறைத்துள்ளது.

ஏற்றுமதி செய்யப்படும் டீசல் மீதான எதிர்பாரா லாப வரியை லிட்டர் ஒன்றுக்கு ரூ.8 லிருந்து ரூ.5 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று ஏற்றுமதி செய்யப்படும் விமான எரிபொருள் மீதான எதிர்பாரா லாப வரியை லிட்டர் ஒன்றுக்கு ரூ.5 லிருந்து ரூ.1.5 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி டீசல், கச்சா எண்ணெய் மீதான வரிக்குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment