KKRVMI :மரண அடி அடித்த ரசல் !மும்பை அணிக்கு இமாலய இலக்கு !

இன்று நடைபெறும் 47-வது ஐபில் போட்டியில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி -மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றது .இந்த போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன் பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி ஆரம்ப முதலே சிறப்பாக ஆடியது.குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர்கள் கில் மற்றும் லின் அதிரடியாக ஆடினார்கள்.அதிரடியாக ஆடிய லின் 54 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.இதன் பின் அதிரடி மன்னன் ரசல் பேட்டிங்கிற்கு வந்தார்.கில்லுடன் இணைந்து மும்பை அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தார்.கில் 76 ரன்கள்(4-6(பவுண்டரி),6-4(சிக்ஸர் ))அடித்து வெளியேறினார்கள்.

இறுதியாக கொல்கத்தா அணி 20 ஒவர்கள் முடிவில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 232 ரன்கள் அடித்தது.களத்தில் ரசல் 80*(4-6 பவுண்டரி,6-8 சிக்ஸர்),கார்த்திக்15* ரன்களுடன் இருந்தனர்.மும்பை அணியின் பந்துவீச்சில் சாகர்,பாண்டியா தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

இதன் பின்னர் 233 ரன்கள் அடித்தால் வெற்றி இலக்குடன் மும்பை அணி களமிறங்க உள்ளது.

Leave a Comment