,
Actor Vijay Political Entry

2024 நாடாளுமன்ற தேர்தல்.? 2026 தேர்தல் தான் இலக்கு.! விஜய் அறிவிப்பு.!

By

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக திகழும் நடிகர் விஜய், தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் மன்றமாக மாற்றி பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார். நீண்ட காலமாகவே விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட போகிறார் என்ற செய்திகள் அவ்வப்போது வெளியாகி வந்தன.

“தமிழக வெற்றி கழகம்” அதிகாரப்பூர்வமாக கட்சியை தொடங்கிய நடிகர் விஜய்.!

இந்நிலையில் தான் இன்று திடீரென தனது கட்சி பெயரை அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளார் என்ற செய்தி காலை முதல் இணையத்தில் உலா வந்தது. இதனை தொடர்ந்து  சற்று நேரத்திற்கு முன்பு அறிக்கை மூலம் தனது அரசியல் பயணத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் விஜய். தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ளார் அதன் தலைவர் விஐய்.

இதற்கான முதற்கட்ட பணிகளை முன்னதாக தனது மக்கள் இயக்க நிர்வாகிகள் உடன் பலமுறை கலந்தாலோசித்து மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் ஆகியோர்களை நியமித்து இருந்தார் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்.

தற்போது விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில்,  2024 நாடளுமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிட போவதில்லை என்றும், 2024 நாடளுமன்ற தேர்தலுக்கு பின்னர் கட்சி கோடி, சின்னம் , கொள்கை பற்றிய விவரங்கள் வெளியிடப்படும் என்றும், அதன் பிறகு மக்களை நேரடியாக சந்திக்க போவதாகவும் அறிவித்துள்ளார்.

மேலும், 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் தான் தமிழக வெற்றி கழக்த்தின் இலக்கு என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார் . மேலும், நிர்வாக சீர்கேடுகள் நிறைந்த ஊழல் நிறைந்த அரசியல் ஒரு புறம் என்றும் மத ரீதியில் மக்களை பிரித்து செயல்படும் மதவாத அரசியல் ஒருபுறம் என தனது அறிக்கையில் விஜய் குறிப்பிட்டுள்ளது தமிழக மற்றும் தேசிய அரசியலில் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

Dinasuvadu Media @2023