தேசிய கல்விக்கொள்கையை விரைவில் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளும் – மத்திய கல்வி அமைச்சர்

நீட் தேர்வு என்பது மத்திய அரசின் முடிவல்ல, அது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்று மத்திய கல்வி அமைச்சர் பேட்டி.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு விரைவில் ஏற்றுக்கொள்ளும். தேசிய கல்விக் கொள்கையில் தமிழ் மொழியும் இணைக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படியே நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களையும் சமன் படுத்தவே நீட் தேர்வு. ஏற்கனவே நீட் தேர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் மீண்டும் சென்னையில் உள்ள சாலையில் வைத்து சொல்கிறேன். நீட் தேர்வு அரசின் முடிவல்ல, அது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, இதில் அரசு தலையிட முடியாது.

கல்வியில் தமிழ்நாடு மிகப்பெரிய பாரம்பரியம் கொண்ட மாநிலம். தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பில் தமிழ்நாடு எப்பொழுதும் முன்னிலையில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 5G தொலைத்‍‍தொடர்பு சேவை இந்தியாவில் அடுத்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment