தமிழகத்திற்கும் நாளை விடுமுறை அளிக்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை.!

உத்தரபிரதேசத்தில் உள்ள புனித நகரமான அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு நாளை ஜன. 22ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக ராமர் பக்தர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், உத்தரப்பிரதேசம், குஜராத், புதுச்சேரி என 16 க்கும் மேற்பட்ட மாநிலங்களின் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களுக்கும் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்திலும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பார்க்கும் வகையில், நாளை தமிழக அரசு பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில், ராமர் கோயிலில் நாளை கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ராமர் கோவில் திறப்பு விழா: எந்தெந்த மாநிலங்களில் ஜனவரி 22 பொது விடுமுறை?

இதேபோன்று புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் விடுமுறை அளித்துள்ளன. இராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தமிழ்நாட்டு மக்களிடையே மேலோங்கியுள்ளது.

பொது இடங்களில் ராமர் கோவில் நேரலைக்கு தடை..!

எனவே, தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில், இராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான (22-01-2024) அன்று அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.