Monday, June 3, 2024

இவர்களின் ஊழல் பட்டியல் ஏப்ரல் 14ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் – அண்ணாமலை

தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வருகிற ஏப்ரல் 14ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என அண்ணாமலை அறிவிப்பு. 

திமுக மற்றும் பாஜக இடையே அவ்வப்போது வார்த்தை போர் ஏற்படுவது வழக்கம். அதேபோல் ஒருவரையொருவர் மாறி, மாறி விமர்சனம் செய்தும் வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னிருந்தே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என தெரிவித்து வருகிறார்.

ஊழல் பட்டியல் 

இந்த நிலையில், தற்போது தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வருகிற ஏப்ரல் 14ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES