பழங்குடியினருக்கான நிதி வேறு எதற்கும் பயன்படுத்தவில்லை.! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்.!

எந்த துறைக்கு நிதி ஒதுக்கப்படுகிறதோ, அந்த துறை மேம்பாட்டுக்கு தான் குறிப்பிட்ட நிதி பயன்படுத்தப்படுகிறது. – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்.

அரசு ஒவ்வொரு துறைக்கும் அதன் மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கும். அதனை அரசு அதிகாரிகள் அந்தந்த துறை மேம்பாட்டு பணிக்கு பயன்படுத்துவது வழக்கம்.

இந்த நிதிகள் முறையாக பயன்படுத்தவில்லை. பழங்குடியினர் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் வேறு துறைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு போடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது, அப்படி எதுவும் நடக்கவில்லை . எந்த துறைக்கு நிதி ஒதுக்கப்படுகிறதோ, அந்த துறை மேம்பாட்டுக்கு தான் குறிப்பிட்ட நிதி பயன்படுத்தப்படுகிறது என குற்றசாட்டை மறுத்து தமிழக அரசு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதில் அளித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment