தமிழ்நாடு மின்வாரிய பணி தனியார்மயம்.! தனியாருக்கு செல்லும் 12,000 இடங்கள்.!

மின் விநியோகத்தில் தடங்கல் இன்றி பராமரிப்பு பணி மேற்கொள்ளவே தனியார் நிறுவனம் மூலம் பணியாளர் நியமனம் – தமிழக அரசு

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவியாளர், வயர்மேன் பணியிடங்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் ஆட்கள் நியமனம் செய்யப்படும் என்றும் 12,000 இடங்கள் தனியாருக்கு செல்கிறது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுபவர்கள் 3 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள். அரசின் தனியார்மய நடவடிக்கையால் இனி ஐ.டி.ஐ படித்தவர்கள் நேரடியாக மின்வாரியத்தின் வயர்மேன் பணியிடத்தில் சேர முடியாது என கூறியுள்ளது.

தனியாருக்கு செல்லும் மின்வாரிய பராமரிப்பு பணி – மின் விநியோகத்தில் தடங்கல் இன்றி பராமரிப்பு பணி மேற்கொள்ளவே தனியார் நிறுவனம் மூலம் பணியாளர் நியமனம் என அரசு விளக்கம் அளித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்