தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது!

தமிழகத்தில் 3,185 மையங்களிலும், புதுச்சேரியில் 40 மையங்களிலும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2022-23-ஆம் ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கிய 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 2-ஆம் தேதி  மாணவர்களுக்கு நடைபெறுகிறது. மொத்தம் 3,225 மையங்களில் 8.75 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழகத்தில் 3,185 மையங்களிலும், புதுச்சேரியில் 40 மையங்களிலும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. பொதுத்தேர்வை தமிழகத்தில் 8.36 லட்சம் மாணவர்களும், புதுச்சேரியில் 14,710 மாணவர்கள் எழுதுகின்றனர்.

சென்னையில் 185 தேர்வு மையங்களில் 45,982 மாணவர்கள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வையி எழுதுகின்றனர். கோவை, மதுரை, புழல், திருச்சி, பாளையங்கோட்டை உள்ளிட்ட சிறைகளிலும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நாளை முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment